அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஆயத்த ஆடை, தோல்பொருட்கள், கடல் உணவு ஏற்று மதி பெருமளவில் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
பின்னலாடைத் தொழில்
பின்னலாடை நகரமான திருப்பூரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் தொழில் நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பனியன் நிறுவனங்களில் திருப்பூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களான பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிர தேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை தவிர பின்னலாடை தொழில் மூலம், 4 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் ஏற்று மதியில் முன்னணி பெற்றுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஜப்பான், அய்ரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி பாதிப்பு
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தார். அப்போதே அவரது அறிவிப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தி வந்தார். ஆனால் இந்தியா அதற்கு அடிபணியாததால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதித்தார்.
இதனால் ஒட்டு மொத்தமாக, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி உயர்ந்தது. இந்த வரி விதிப்பு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்ததால், ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூர் மாநகரம் ஆட்டம் கண்டுள்ளது.
இதன் எதிரொலியாக, கடந்த சில நாட் களாக கொச்சி, மும்பை, தூத்துக்குடி துறை முகங்களில் இருந்து ஆயத்த ஆடைகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பது நிறுத்தப் பட்டுள்ளது.
ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் தயாரான ரூ.500 கோடி மதிப்புள்ள 15 லட்சம் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அடுத்ததாக 25 லட்சம் ஆடைகள் தயாரிப்பு அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேலையிழப்பு
இதனால் பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள் ளனர். இதுமட்டுமின்றி தொழில் நிறுவனத்தினர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளனர்.
ஆடைகள் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதால் மேலும் பல தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ஏராளமான நூற்பாலைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் தேக்கம் அடை யும்போது, கோவையில் நூல் உற்பத்தி பாதிக்கும். இதனால் நூற்பாலைகளில் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தோல்
பொருட்கள்
பொருட்கள்
வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் அடங்கிய ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 300 தோல் தொழிற்சாலைகளும், 200 காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல் பட்டு வருகின்றன. இங்கு சுமார் 2 லட்சம் தொழி லாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தோல் பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்படும். சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 1ஆம் தேதி முதல் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடல் உணவு
அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அமெரிக்காவுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படு கிறது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக கடும் பாதிப்பை சந்தித் துள்ளன. அதாவது ஏற்றுமதி சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டதாகவும், கடல் உணவு நிறுவனங்கள் கடுமையான இழப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகி இருப்பதாகவும் டி.எஸ்.எப். கடல் உணவு ஏற்றுமதி நிறுவன இயக்குனர் கிப்ட்சன் தெரிவித்தார்.