சென்னை, ஆக. 29- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 487 வது வார நிகழ்வாக 23.8.2025 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.
பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆர்.பிச்சைமணி முன்னி லையில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பா ளர் பா.தென்னரசு தலை மையில் வன்முறை என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தி என்ற கலைஞரின் திராவிட மாடல் ஆட்சியின் சாத னைகள் கருத்தரங்கில் திராவிட முன்னேற்ற கழக தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் மா வள்ளிமைந்தன் தே. குணாபாரதி, (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகி யோர் உரையாற்றினர்.
நிகழ்வில் டி. சுகுமார், சுமதிமணி, ஹரிதாஸ், கருப்பசாமி, ஆறுமுகம், தமிழ்மதி, வழக்கறிஞர் துரைவர்மன், அருமை நாதன் (காங்) ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆவடி மாவட்ட திரா விடர் கழக செயலாளர் க. இளவரசன் நன்றி கூறினார்.