தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப் பட்டிருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
ஆனால் இந்த விநாயகர் சிலைக்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படியா செய்தி! நிஜத்தில் முதலமைச்சர் ஆக மாட்டாரா? அவர் முதலமைச்சர் ஆவது வெறும் பொம்மை விளையாட்டு தானா?