பேரறிஞர் அண்ணா
(பேரறிஞர் அண்ணா அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச் சிறை யில் தலைவர் கலைஞர் அவர்கள் அடை பட்டிருந்த காட்சி கண்டு வெளிப்படுத்திய துயரம்.)
காலை மணி பத்து இருக்கும்: நான் அங்குச் சென்றபோது; உடன் வந்திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத். வழக்குரைஞர் இரத் தினவேலு பாண்டியன் மற்றும் பலரையும் தனியே இருக்கச் செய்து விட்டு, என்னை மட்டும், சிறை அதிகாரிகள் மூவர், கருணாநிதி இருந்த சிறைக்கூடம் அழைத்துச் சென்றனர். சந்தித்துப் பேசுவதற்காக ஓர் அறை தயாரிக்கப்பட்டிருந்தது; இரு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கருணாநிதி அழைத்து வரப்பட்ட போது, முன்பு பலமுறை ஒருவரை ஒருவர் சிறையினில் சந்தித்ததுண்டு என்ற போதிலும், இம்முறை தனியான தோர் தவிப்புணர்ச்சி எழுந்து வாட்டி யது. அதனை அடக்கிக்கொள்வது கடினம் என்ற போதிலும், கலக்கம் காட்டுவது நமது உள்ளத்தின் உறுதி பற்றி மற்றவர்களுக்கு அய்யப்பாடு ஏற்படுத்திவிடுமே என்ற அச்சம் வாட்டி யது; தவிப்புணர்ச்சியைத் தள்ளிவைத்து விட்டு, அரைமணி நேரத்திற்குமேல் பேசிக் கொண்டிருந்தோம். முன்னாள் நள்ளிரவிலேயே நான் நெல்லை போய்ச் சேர்ந்து விட்டேன்; விடிந்ததும் என் காதில் விழுந்த முதல் செய்தி, மாறனைப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து விட்டிருக்கிறார்கள் என்பது. கைது செய்யப்படக்கூடும் என்று நெல்லைக்குக் கிளம்புவதற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து தொலை பேசி மூலம் மாறனிடம் பேசினேன்.அறிகுறிகள் தென்பட்டிருந்தால்கூட என்னிடம் சொல்லி இருந்திருப்பார். ஆகவே, நெல்லையில் நான் கேள்விப் பட்ட செய்தி என்னைத் தூக்கிவாரிப் போட்டது.
கொடுமைகள் இழைக்கப்படும் போது, அநீதி தலைவிரித்தாடும்போது, அக்கிரமம் தம் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போது, எல்லாம் இறுதியில் நன்மைக்கே என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமா தானம் தேடிக்கொள்ள முடியவில்லை. காரணம், நாம் ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையிலே மட்டும் இருந்து வருபவர்கள் அல்லர்: பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாகி விட்டிருக்கிறோம். அத னால் நம்மில் சிலருக்கு இழைக்கப்படும் கொடுமை, நம் எல்லோருடைய உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்தி விடுகிறது.
அடக்குமுறையை வீசி அறப்போர் வீரர்களை அடக்கிவிடவோ, அவர்தம் பாசறையை ஒழித்துவிடவோ முடி யாது. இது மிக எளிதாக எவருக்கும் புரிந்திடும் உண்மை என்றாலும். அரசாள்வோர். அதிலும் தமது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து பீதி கொண்டுள்ள நிலையிலுள்ள அரசாள் வோர். உண்மையினை மறந்து விடு கின்றனர்.
சிறைக்கோட்டம் தள்ளப்படும் இலட்சியாவாதிகளோ. உறுதி பன் மடங்கு கொண்டவர்களாவது மட்டு மல்ல; தன்னைப் பற்றிய எண்ணம். தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம் பற்றிய எண்ணம். இவைகளைக்கூட மறந்துவிடவும். தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக் காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும். தன்னைப் பற்றிய எண்ணம் எழுப்பிவிடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற் றாமை போன்ற உணர்ச்சிகளை வென் றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது. இது பற்றியே ஆன் றோர். சிறைச் சாலையை அறச்சாலை என்றனர்.
பாளையங்கோட்டைச் சிறைவாயி லில் கண்டேன்; இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை. அங்கு பொறிக்கப்பட்டிருப்பது என்ன?
“தன்னை வெல்வான்! தரணியை வெல்வான்!”