கலைஞர் கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்வை. சமீபத்திய வரலாற் றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்ட ரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக் கத்தின் பங்களிப்புகளையும் வெளிக் காட்டும் கண்ணாடி அவருடைய வாழ்க்கை!
தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் நாட்டின் பிற பகுதியில் உள்ள இயக்கங் களுக்கு ஒரு வழிகாட்டி அரை நூற் றாண்டாகத் தமிழ்நாட்டின் ஆட்சியதி காரம் இரு திராவிடக் கட்சிகளையும் தாண்டிச் செல்லாமல் இருக்க சமூக நீதி இயக்கமே முக்கியமான காரணம். சமூக நீதிக்கான இயக்கத்தை வெற்றிகரமான அரசியல் கட்சியாக மாற்றிய முதல் தலைமுறை அரசியல்வாதிகளில் முக் கியமானவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கம் வலுவாகக் காலூன்றியதற்கான முக்கி யமான காரணங்களில் ஒன்று, அதன் பலன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பலன் தந்ததோடு நிற்கவில்லை என்பதேயாகும். இதிலும் அவர் முக் கியப் பங்காற்றியிருக்கிறார். வட இந்தி யாவிலும் பிற்படுத்தப்பட்டோர் உரிமை களைப் பேசும் அரசியல் 1960களில் தொடங்கியது. 1967இல் அவர்களில் பலர் முதலமைச்சர் பதவிக்கும் வந் தனர். ஆனால், இது சமூக நீதியை நோக்கிய வெற்றிகரமான பயணமாக அமையவில்லை. விரைவிலேயே அந்த அலை வடிந்தது. மீண்டும் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்தக் குரல் களைக் கட்டுப்படுத்தியது. 1990களில் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக் கப்பட்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்த பிறகே சமூக நீதியை நோக்கிய அடுத்த பயணத்தில் வட இந்தியா காலடியை வைத்தது. அதேபோல, அரசியல் தளத்தில் பிற் படுத்தப்பட்ட சமூகத்தை நோக்கி அதி காரம் சென்றாலும், பிற்படுத்தப்பட்ட வர்களில் செல்வாக்கு மிக்க – தாக்கூர், மராத்தா, யாதவ், குர்மி போன்ற – உயர் ஜாதியினரைத்தான் அது மய்யம் கொண்டிருக்கிறதே தவிர, வேர் நோக் கிச் செல்லவில்லை. ஆனால், மக்கள் தொகையில் மிகச் சிறிய எண்ணிக்கை யைக் கொண்ட, ஜாதிய அடுக்குகளில் கீழே இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து வந்து, இவ்வளவு உயர்ந்த இடத்தை கலைஞர் கருணாநிதி தக்க வைத்தி ருப்பது சமூகப் புரட்சியே தவிர வேறல்ல. அந்தப் புரட்சிக்கு அவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்!
தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாக உயர கலைஞர் கருணாநிதி முக்கியமான காரணம், சமூக நீதி அரசியலை அரசுத் திட்டங் களாக உருமாற்றியது அவருடைய இன்னொரு முக்கியமான சாதனை. சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத் துவதில் திமுக, அதிமுக இடையில் ஆரோக்கியமான போட்டி எப்போதும் நிலவியது. இதனால்தான் சமூக நலத் திட்ட அமலாக்கத்திலும் வளர்ச்சியிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு திராவிட இயக்கத்தின் நிரந்தரமான பங்களிப்பு என்றால் அது, ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ என்ற தேசியவாதத்தை ஏற்க மறுத்து அதில் உறுதியாக நிற்பது தான்.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சி யில் மாநில அரசு ஒருபோதும் மத்திய அரசுக்குக் கீழான அரசாகச் செயல் பட்டதில்லை. மத்திய-மாநில உறவு தொடர்பாக அவர் நியமித்த ராஜ மன்னார் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தாலும் கூட்டாட் சியை வலுப்படுத்துவதற்கான கதவை அது திறந்தது. சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடி யேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவரும் அவரே. தன்னுடைய ஆட்சியையே விலையாகக் கொடுத்து நெருக்கடி நிலை அமலாக்கத்தைத் துணிவோடு எதிர்த்த முதல்வர் என்று வரலாற்றில் என்றும் கருணாநிதி நினைவு கூரப்படுவார்.
தமிழில்: வ.ரங்காசாரி
நன்றி: தெற்கிலிருந்து ஒரு சூரியன்