மதுரை, ஆக.28 அண்மையில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துக ளுக்கு முக்கியக் காரணம், உள்ளூர் மொழி தெரி யாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (27.8.2025) நடை பெற்ற பொது விநியோகத் திட்டக் கலந்தாலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தித் திணிப்பு மற்றும் மொழிப் பிரச்சினைகள் குறித்துப் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த வாரம் தெற்கு ரயில்வேயில் நடைபெற்ற பதவி உயர்வுத் தேர்வில், விதிகளுக்கு மாறாக, வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே இருந்ததாகவும், தமிழ் மொழி புறக்கணிக்கப ்பட்டதாகவும் சு.வெங்கடே சன் தெரிவித்தார். இந்த அநீதி குறித்து ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், உடனடியாக இந்தத் தேர்வை ரத்து செய்து, தமிழில் வினாத்தாளை வழங்கி மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ள தாகவும் கூறினார். இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப் பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே, தெற்கு ரயில்வேயில் ஹிந்தியில் பயிற்சி மற்றும் ஆளுமையை வளர்த்துக்கொள்ள அலு வலர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அடுத்த சுற்ற றிக்கை வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது ஹிந்தித் திணிப்பு தொடர் வதைக் காட்டுவதா கவும் அவர் தெரிவித்தார்.
மொழிப் பிரச்சினை என்பது அலுவல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல என்றும், பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார். சமீப காலங்களில் ரயில்வேயில் நடந்த பல விபத்துகளுக்கு, அந்தந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பது ஒரு முக்கியக் காரணம் என அவர் தெரிவித்தார். உள்ளூர் மொழி தெரியாததால் தகவல் தொடர்பில் ஏற் படும் குழப்பங்கள் விபத் துகளுக்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார்.