என்ன காரணம்?
சீடன்: ஒவ்வொரு பண்டிகையும் ஏன் கொண்டாடப்படுகிறது? சங்கட ஹர சதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி, ராகுகாலம், எமகண்டம் நேரங்களில் என்னென்ன எல்லாம் செய்யக்கூடாது? உள்ளிட்ட ஆன்மிக செய்திகளை ஒரு தொலைக்காட்சி காலை 6 மணிக்கு எல்லாம் அவிழ்த்துக் கொட்டுகிறதே, குருஜி?
குரு: ஒரே நாளில் மூன்று ரயில் விபத்துகள் நடந்தன – இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? பயணம் செய்த அத்தனை பேரும் நல்ல நேரம் பார்த்து காரியங்கள் செய்யாததுதான் காரணமா, சீடா?
***
சொல்லுங்கள் பார்ப்போம்?
சீடன்: செங்கோலை கொடுத்துவிட்டு, டில்லியில் இருந்து சென்னை திரும்பிய திருவாவடுதுறை ஆதினத்திற்கு பூரண கும்ப வரவேற்பு என்று செய்தி வந்துள்ளதே குருஜி.
குரு: திருவாவடுதுறை ஆதினகர்த்தரை காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் சங்கராச்சாரியாருக்கு இணையாக நாற்காலி போட்டு உட்காரச் சொல்லுங்கள், பார்ப்போம் சீடா!