குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். எப்படி தெரியுமா? www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை தேர்வு செய்து அழுத்த வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை தரவேற்றம் செய்ய வேண்டும். 30-45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும்.