மத்திய புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள உதவி பொது வழக்குரைஞர் மற்றும் பொது வழக்குரைஞர் ஆகிய பணியிடங்களையும், லடாக் யூனியன் பிரதேசத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பல்வேறு பாடங்களுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. மொத்தம் 84 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
யுபிஎஸ்சி பணியின் விவரங்கள்
உதவி பொது வழக்குரைஞர் – மத்திய புலனாய்வு பிரிவு – 19 இடங்கள்
பொது வழக்குரைஞர் – மத்திய புலனாய்வு பிரிவு – 25 இடங்கள்.
விரிவுரையாளர் – பள்ளி கல்வித் துறை, லடாக் யூனியன் பிரதேசம் – 40 இடங்கள்.
தாவரவியல், வேதியியல், பொருளாதாரம், வரலாறு, வீட்டு அறிவியல் இயற்பியல், உளவியல், சமூகவியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களில் உதவி பொது வழக்குரைஞர் பதவிக்கு அதிகபடியான வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது வழக்குரைஞர் பதவிக்கு அதிகபடியான வயது வரம்பு 35 ஆகும்.
இதுவே, விரிவுரையாளர் பணியிடங்களுக்கு அதிகபடியான வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு விதிமுறைகளின்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு உள்ளது.
ஊதிய விவரம்: ஒன்றிய அரசின் 7ஆவது ஊதிய குழுவின் நிர்ணயம் படி, உதவி பொது வழக்குரைஞர் பதவிக்கு நிலை-7, பொது வழக்குரைஞர் பதவிக்கு நிலை 10 மற்றும் விரிவுரையாளர் பதவிக்கு நிலை 9 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: உதவி பொது வழக்குரைஞர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது வழக்குரைஞர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குற்ற வழக்குகளில் 7 வருடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
விரிவுரையாளர் பதவிக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பை உடன் பி.எட் (B.Ed) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பத்தில் வழங்கிய விவரங்களின்படி, தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: யுபிஎஸ்சி நேரடி நியமனம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் சுய விவரங்கள் உட்பட கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.09.2025.