சிலையாய் நிற்கும் பெரியார் மண்ணில்
சீறிப் பாயும் சிறுமைப் பூணூல்
அலையில் துரும்பாய் அமிழ்ந்து புரளும்
அன்பும் பண்பும் ஆரிய அழலே
வலைபடு மீனும் வறுமை போக்கும்
வன்மன பார்ப்பான் வாய்ச்சொல் லேய்க்கும்
சிலைவழி மனுமுறை திராவிட மண்ணை
தின்னும் சிதலும் தெய்வ மாமோ?
இல்லை கடவுள் என்ப துண்மை
இருக்கு மென்பான் இருள்மன ஏய்ப்பான்
கல்வி பறித்த கயவன் யாரே
கனவிலும் வேண்டாக் கழிசடை யவனே
கொல்லிப் பார்வை கொடுமன யாகம்
கோடும் பார்ப்பான் குறுநரி கொடிதே
இல்லை யவனுக் கிங்கே யிடமே
என்றார் எந்தை பெரியா ரன்றே!
பூணூல் அறுக்கும் போரைத் தொடுத்தார்
புத்தர் வழியில் போதனை புரிந்தார்
வீணே தாலி வேண்டா யடிமை
விடுதலைச் சிறகை விரித்திடு என்றார்
நாணம் ஏனோ நால்வகை சாதித்
தடையை உடைத்து வதுவை நடத்து
காணும் கண்ணும் கடனறி நெறியும்
காக்கும் சுயமரி யாதைக் குறியே!
திருச்சி நகரில் தேரெனப் பெரியார்
தென்னவ னாக திருநிழல் சிலையோ
எரிதீக் கனலே எதிர்த்திட யாரே
எங்கும் திராவிட இனத்தின் சுடரே
விரித்திட ஆரிய வலையோ யிங்கே
மிதிபடு வீரே நரிமனத் தோரே
கருமனக் காவி கற்சிலை யாமோ
கருவி யெழுந்திட கைபடு பொடியே!
– பாவலர் சீனி. பழனி.