அன்னை ஈ.வெ.ரா.மணி அம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் உ.வாசுகியின் பேச்சு மிகவும் அருமை. மணியம்மையார் ஒரு பெண்ணாக இருந்தும் கூட திராவிடர் கழகத்துக்கு தலைமையேற்று நடத்தியதையும், சிறந்த எழுத்தாளராக பேச்சாளராக – அமைப்பாளராக பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தார் என்பதையும் எடுத்துக் கூறினார். ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக அவர் ‘குடிஅரசு’ இதழில் எழுதிய கட்டுரைக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. தான் உண்மையையே எழுதியதாகவும் அதற்காக தாம் அபராதம் கட்டாமல் 15 நாள் சிறை செல்ல தயாராக இருப்பதாகக் கூறி 15 நாள் சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தார். சமூக மாற்றத்தை சாதித்த பெண்கள் வரிசையில் மணி அம்மையாருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்றும் தமிழ்நாட்டில்தான் ‘பெண்களின் தலைமை அதிகம்’ எனும் தலைப்பில் தோழியர் வாசுகி மேலும் பேசியதை Periyar Vision OTT இல் கண்டு மகிழுங்கள்.
– கே.வெங்கட்ராமன், சிதம்பரம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com