டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சுதர்சன் ரெட்டியை நக்சல் என்பதா? இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் உட்பட 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலுங்கானா 42% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மசோதா: சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ரேவந்த் டில்லியில் ஆய்வு.
* 42% இட ஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட்டால், உள்ளாட்சிப் பொறுப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 24000க்கும் அதிகமாக உயரும்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசியலமைப்புச் சட்ட மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாடு 234 கேள்விகளை முன்வைக்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு அரசின் யூனியன்-மாநில உறவுகளுக்கான உயர்மட்டக் குழுவின் (HLUSR) கேள்வித்தாளில், இந்தியாவை அனைத்து முக்கியத் துறைகளிலும் ‘உண்மையான’ கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்காக 75 ஆண்டுகால அரசியலமைப்பை மாற்றி அமைப்பது தொடர்பான 234 கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
தி ஹிந்து:
* யுஜிசியின் வரைவு பாடத்திட்டத்தை கேரளா எதிர்க்கிறது, ‘இந்துத்துவா சித்தாந்தத்தை’ திணிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* கருநாடக கல்விக் கொள்கை வரைவு, இளங்கலை படிப்புகள், மொழி சூத்திரம் ஆகியவற்றில் தேசிய கல்விக் கொள்கையில் இருந்து முற்றிலும் மாற்றம். என்.சி.இ.ஆர்.டி. (NCERT) நூல்களை ரத்து செய்ய பரிந்துரைக்கிறது, தனியார் உதவி பெறாத நிறுவனங்களில் ஓபிசி ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது
– குடந்தை கருணா