தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்க ளைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் அனுமதி கோரிய வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே, கதிராமங்கலம், புதுக்கோட்டை நெடு வாசல் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இதற்கு பெரும் மக்கள் எதிர்ப்பு எழுந்தது.
2020 இல் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக அறிவித்துச் சட்டமும் 2020 இல் இயற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தனிச்சியம், கீழ்செல்வனூர், பூக்குளம், வல்லக்குளம், அரியக்குடி என 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் குழாய்கள் அமைப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளிவந்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு
தன்னிச்சையாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கி யுள்ள அனுமதியைத் திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ள தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரி வித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
2020 ஆம் ஆண்டு சட்டத்தின்படி தஞ்சா வூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருந்ததையும், 2023 ஆம் ஆண்டு அதில் மயிலாடுதுறை மாவட்டமும் சேர்க்கப்பட்டிருப்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு
மேலும், “விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும். எனவே, தற்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒருபகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனு மதிக்காது” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் இயற்கை அமை வுச் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க வும், வேளாண்மை நிலங்கள் பாது காக்கப்படவும் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையை வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.8.2025