சென்னை, ஜூன் 4 – தமிழ்நாட்டில் நடப்பு கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில், வியாபாரிகளின் தலை யீட்டை தடுக்க ‘பயோமெட்ரிக்’ முறையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு 1.6.2023 அன்று முதல் அறிமுகப் படுத்தி யுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இணை யத்தில் பதிவு செய்து, அதன் மூலம் அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தொகை வங்கிக்கணக்கில் விடுவிக்கப் படுகிறது.
இதில் பல பகுதிகளில் விவசாயிகள் போர்வையில் வியாபாரி களும் நெல் விற்பனை செய்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆதார் அடிப் படையில், விரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே கொள்முதல் செய்யும் பணியை நேற்று முதல் தமிழ்நாடு அரசு தொடங்கியுள் ளது. இதன் மூலம் கொள்முதல் மய்யங்களில் வியாபாரிகள் நுழைவது தடுக்கப்படும் என்றும் அதிகளவில் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் உணவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத் தப்பட்டு, நேற்று முதல் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
இனிமேல், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களி லும் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக இணைய வழியில்பதிவு செய்யும்போது, ‘பயோமெட்ரிக்’ முறையில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நெல்லை காலதா மதமின்றி உடனுக் குடன் கொள் முதல் செய்யமுடியும். விரல் ரேகை பதிவு மூலம்ஆதார் எண்ணில் பதிந்துள்ள எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) பெறுவதன் மூலம் விவசாயிகள் விவரத்தை துல்லியமாகவும் பதிவேற்ற முடியும். விவசாயிகளும் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை நெல் கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்து நெல்லை விற்க முடியும்.
சமீபத்தில் ராணிப்பேட்டையில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்த வியாபாரிகள், அதிக விலைக்கு விற் பனை செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு கூடுதல்தொகை வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
கொப்பரை கொள்முதல்: ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில், தமிழ்நாட்டில் ரூ.640 கோடி மதிப்புள்ள 56 ஆயிரம் டன் கொப்பரைத் தேங் காயை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது.
இதை செயல்படுத்தும் வகை யில் 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையத் தால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதியளித்து தமிழ்நாடு வேளாண்துறை அரசாணை வெளியிட்டு, அதற்கான வழிகாட் டுதல்களையும் வெளியிட்டுள்ளது.