கோபுர வாசலில் ரோடு உள்ளது. அதைத் தாண்டி காந்தியார் மண்டபத்துடன் சிலை உள்ளது. ஒருவேளை காந்தியார் சிலையை பார்த்துதான் பெரியார் சிலை என்று ஆட்டுக்குட்டி அண்ணாமலை கூறுகிறாரோ?
கோவில் வாசலில் ஒரு ரோடு உள்ளது – அதைத் தாண்டி காந்தியார் சிலை மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி ஒரு சிறிய மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி மூன்று ரோடு சந்திப்பு உள்ளது. அதைத் தாண்டி இரண்டு மூன்று கட்டடங்களைத் தாண்டி தான் தந்தை பெரியார் சிலை உள்ளது; கோயிலுக்குப் போவதற்கும் சிலை உள்ள இடத்திற்கும் சம்பந்தமில்லை.
கோவில் வாசலில் இதோ ரோடு உள்ளது. கோயில் வாசல் அருகே குப்பை வண்டி போய்க்கொண்டு உள்ளது. இதில் கோயில் வாசலில் எங்கே உள்ளது பெரியார் சிலை – பொய்யின் மொத்த உருவமே பாரதிய ஜனதா கட்சி.
சிறீரங்கம் கோவில் கோபுரம் இருக்கும் இடத்திற்கும் பெரியார் சிலைக்கும் வெகு தூரம் – குறுக்குச் சாலைகளை தாண்டியே உள்ளது பெரியாரின் சிலை.
ஹிந்து பக்தர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு பொய் சொல்லி ஏமாற்றும் ஆட்டுக்குட்டி – பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவரின் யோக்கியதை இதுதான். அவர் சொல்லிய சிறீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை – கோபுரம் எங்கு உள்ளது? பெரியார் சிலை எங்கு உள்ளது? கடவுள் மீது உண்மை பக்தியுள்ள ஹிந்து பக்தனே சிந்தித்து செயல்படு. இந்த பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை போன்ற பொய் மோசடி பித்தலாட்டக்காரர்கள் தொடர்ந்து மக்களிடையே ஏற்படுத்தி வரும் குழப்பத்தை புரிந்துணர்ந்து இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
– சமூக ஊடகத்திலிருந்து…