வன்னிப்பட்டு, ஆக. 25- நேற்று (24-08-2025) காலை 10 மணிக்கு வன்னிப்பட்டு கிழக்கு செல்லப்பன் மறைவை ஒட்டி இரங்கல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மறைந்த செல்லப்பன் கழகத்திற்காக சிறை வரை சென்று தன்னுடைய மகன் தமிழ்ச்செல்வனை இயக்கத்திற்கு முழு நேரமாக அர்ப்பணித்தவர். அஞ்சலை அம்மாள், சங்கர், தமிழ்ச்செல்வன், குருமூர்த்தி, குமார் இயக்கத்திற்காக பல்வேறு தியாகங்களை ஏற்று செயல்படுத்திய குடும்பம் என இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு.பழனிவேல் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை, கழக சொற்பொழிவாளர் இரா பெரியார் செல்வன், அரிமா சங்க சாசன தலைவர் ஒரத்தநாடு ராஜ மாணிக்கம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் தஞ்சாவூர் மிட்ட வுன் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் ,திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு. வேலுச்சாமி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
பிறகு அவர்களது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு மன்னிப்பு சுடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டது.
ஒரத்தநாடு ஹெரிடேஜ் ரோட்டரி சங்க பொறுப் பாளர்கள் உள்ளிட்ட ஏரா ளமான கழகத் தோழர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் திர ளாக திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த செல்லப்பனின் கண்கள் தஞ்சை ரோட்டரி சங்கம் மூலமாக கொடை யாக வழங்கப்பட்டது.