ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிர்வாக இலட்சணம் பாரீர்! 5 ஆண்டுகளாக 1.4 லட்சம் ரயில்வே பதவிகள் காலி!

Viduthalai
1 Min Read

அரசியல்

மும்பை, ஜூன் 4  ரயில்வேயில் பாதுகாப்புத் துறைக்கான பணியாளர்களை 2017 ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கவில்லை. இந்தத் துறையில் 1.4 லட்சம் பதவிகள் காலியாக உள் ளன என்று  2017 ஆம் ஆண்டு ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்துமுடிந்த பிறகு நடந்த விசாரணையில் பாதுகாப்பு பணிகளில் போதிய அளவு அதிகாரிகள்/ ஆலோசகர்கள் இல்லாத காரணத்தால் இந்த விபத்து நடந் ததாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.   

24.01.2017 ‘டைமஸ் ஆப் இந்தியா’வில் வந்த செய்தி 

இந்த நிலையில் கரோனாவிற்கு பிறகான நிதி நிலை அறிக்கையில் கூட இந்தப் பதவி களை நியமிக்க ஆணையும் பிறப்பிக்கப்பட வில்லை அதற்கான நிதியும் ஒதுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாட்கள் இல்லை, பாதுகாப்பு உபகரணங்கள் குறைபாடு, பராமரிப்பிண்மை விபத்திற்கு கார ணம் ஒன்றிய அரசுமட்டுமே!

காங்கிரஸ் அரசில் ரயில்வேக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை உண்டு. அப்போது அனைத்து அம்சங்களும் அதில் பரிசீலிக்கப் படும். ஆனால் மோடி வந்த பிறகு ரயில்வே நிதிநிலை அறிக்கையை ரத்து செய்து, பொது நிதி நிலை அறிக்கை யோடு இணைக்கப்பட்டது. இதன் விளைவு  கடந்த 8 ஆண்டுகளாக ரயில்வே நிதியில் பெரும் குறைபாடு ஏற் பட்டுள்ளது.

‘எகனாமிக் டைம்ஸ்’ 2021 பட்ஜெட் அலசல் குறித்த கட்டுரையிலிருந்து

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *