பெரியார் சிலை அல்ல!
அதனுள் இருப்பது வைதீகத்தை அழிக்க வந்த ஈரோட்டு பூகம்பம்!!
பெரியார் தனி மனிதரல்ல தத்துவம்!!
உடைப்பதற்கு அது ஒன்றும் கல்லாலோ பித்தளை போன்ற பிற உலோகங்களாலோ ஆனதில்லை!!
மாறாக தமிழர்தம் தசைகளிலும் குருதியிலும் கலந்துவிட்ட பாஸ்பரஸ் கலவை – பெரியார் அக்னி குஞ்சு – அதுதான் ஆத்திகத்திற்கு ஆம் மனுநீதிக்கு தீயிட்டது. மனுவை ஆதரிப்பதால் அரசியல் சட்டத்தையும் எரித்தது. ஆடுகளே ஸநாதன பிராணிகளே நீங்கள் திராவிடம் உள்ளவரை ஆட்சிக்கே வரமுடியாது.
திராவிடத்தை அழிப்பேன் என புறப்பட்டவனுக்கெல்லாம் கல்லறை கட்டியது – உனக்கேன் அந்த ஆசை அண்ணாமலையே?
– இரா.தங்கதுரை
(தலைவர், நாகை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை)