அமெரிக்காவில் ராகுல் குரல்
நியூயார்க், ஜூன் 5 கடந்த மாதம் கருநாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி ஆட் சியைப் பிடித்தது. நியூயார்க்கில் இந்த வெற்றியினை சுட்டிக் காட்டி பேசிய ராகுல் காந்தி…..கருநாடகாவில் பாஜக-வை காங் கிரஸ் மட்டும் வீழ்த்த வில்லை. மக்களும் தான் வீழ்த்தினர். இதைப்போன்று வரும் தெலுங் கானா தேர்தலிலும் பாஜக-வை தோற் கடித்து காங்கிரஸ் கருநாடகாவைப்போல் வெற்றி பெறும். அதன்பிறகு வருகின்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தலிலும் காங்கிரஸ் இதை செய்யும். தெலுங்கானா தேர்தலுக்கு பின்னர் பாஜக-வை கண்டுபிடிப்பதுகூட கடினமாகலாம். இதனை இந்திய மக்களே செய்வார்கள். பாஜகவிற்கு எதிராக இது ஒரு சித்தாந்தப் போராட்டம். ஒருபக்கம் ,வெறுப்பு நிறைந்த பாஜக உள்ளது. மறுபக்கம் அன்பான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய மக்கள் பாஜக-வை தோற்கடிக்கப் போகிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.