நீலமலை, ஆக. 24- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவுறுத்தலின்படி அக்டோபர் 4 அன்று நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நீலமலை மாவட்டத்தின் சார்பில் குன்னூர் பெரியார் திடலில் 21.8.2025 அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.