வன்னிப்பட்டு செல்லப்பன் மறைவு கழகப்பொதுச்செயலாளர் இறுதி மரியாதை

 

தஞ்சாவூர் மாநகர கழகத் தலைவர், தமிழ்ப் பயண தொடர்பக உரிமையாளர் செ.தமிழ்ச்செல்வன், ஊராட்சி செயலாளர் செ.சங்கர், ஊராட்சி செயலாளர் செ.குருமூர்த்தி, பொறியாளர் செ.குமார் ஆகியோரின் தந்தையார் செல்லப்பன் 23-08-2025 காலை 10 மணி அளவில் மறைவுற்றார்.

23-08-2025 இரவு 7 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள்  மறைந்த செல்லப்பனின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார்,மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை மாநில தலைவர் மா.அழகிரிசாமி, மாநிலக் கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன்,பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ரெ.சுப்பிரமணியன், தஞ்சை மாநகரச்செயலாளர் இரா. வீரக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, தஞ்சை மாநகரப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் நாகநாதன், ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன்,  கு.அய்யாதுரை, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கு. லெனின், பேராசிரியர் குட்டிமணி, தி.மு.க. ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரோட்டரி ஆளுநர் ந.மணிமாறன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நெடுவை ந.நேரு, நெடுவை ந.காமராசு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி கலைச்செல்வன், உள்ளிட்ட கழகத் தோழர்களும் நண்பர்களும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்களும் உறவினர்களும்  இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழர் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனும் தொலைபேசியில் தமிழ்ச்செல்வனிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்

24-08-2025 காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வன்னிப்பட்டு கிழக்கு அவர்களது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்புக்கு: செ.தமிழ்ச்செல்வன் – 9360262646

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *