இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்..)யின் மூத்த தலைவரும், மேனாள் தேசியப் பொதுச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி, வாழ்நாள் போராளியாகவே வாழ்ந்து, அவ்வியக்கத்தினை வழி நடத்தும் குழுவின் ஆற்றல் மிகு தலைவராகவும் திகழ்ந்து – தொண்டாற்றியத் தோழர் எஸ். சுதாகர் ரெட்டி அவர்கள் (வயது 83) இயற்கையெய்திய (22.8.2025) செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது திருப்பூரில் நாங்கள் இருவரும் ஒரே மேடையில் (தேர்தல் பிரச்சாரம்) பேசினோம். பா.ஜ.க., ஹிந்து முன்னணியினர் கலவரம் செய்து இடையூறு செய்த நிலையிலும் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது – ஒரு பசுமை நினைவு!
அவரது மறைவு கொள்கைப் பொது வாழ்வுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்தவருக்கும், திராவிடர் கழகம் சார்பில் ஆறுதலும், மறைந்தவருக்கு இரங்கலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வீர வணக்கம் செலுத்துகின்றோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
24.8.2025