‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

சென்னை, ஆக.24- முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள அய்அய்டி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இந்தத் தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த ‘கேட்’ நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டடவியல் உட்பட 30 பாடப் பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2026ஆம் ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15ஆம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெறவுள்ளது. இந்த முறை ‘கேட்’ தேர்வை கவுகாத்தி அய்அய்டி நடத்த உள்ளது. மேலும், தேர்வுக்கான மய்யங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் https://gate2026.iitg.ac.in/ எனும் வலைதளத்தில் சென்று செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் மார்ச் 19இல் வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *