சேலம், ஆக.24- சேலம் SS மருந்தியல் நிறுவனம் “Strategic Solutions for Addressing Global Health Needs Through Pharmacy” என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய கருத்தரங்கை 19.08.2025 அன்று நடத்தியது.
இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. இராஜகோபாலன் வழிகாட்டுதலில் நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்
மு.கார்த்திகேயன் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பித்தார்.
25க்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரிகள் பங்கு கொண்ட இப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழினைப் பெற்று மு.கார்த்திகேயன் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பரிசு வென்ற மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.