அங்காரா, ஆக. 24- காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால் அவதிப்படும் குழந்தைகள் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வாழ்விணையர் மெலானியாவிடம், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகனின் வாளழ்விணையர் எமினே கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள குழந்தைகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மெலானியா கடிதம் எழுதியிருந்தார். மெலானியாவின் இந்தச் செயல் தனக்கு உத்வேகத்தை அளித்ததாகக் குறிப்பிட்ட எமினே, காசாவில் உள்ள குழந்தைகளின் அவல நிலையையும் கருத்தில் கொண்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா குவிடம் இது குறித்துப் பேச வேண்டும் என மெலானியாவை வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் குழந்தைகள் மீது காட்டும் அதே அக்கறையை காசாவில் உள்ள குழந்தைகளிடமும் மெலானியா காட்டுவார் எனத் தான் நம்புவதாக எமினே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.