தாராபுரம், ஜூன்.5- ‘’அறிவுலக ஆசான்” தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாள், ‘’சட்ட மேதை’’ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 132ஆவது பிறந்த நாள், ‘’முத்தமிழறிஞர்’’ டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்த நாள் என முப்பெரும் விழாக்களை கொண்டாடும் வகை யில், திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட பொருளாளரும், தாராபுரம் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் செயலாளருமான ப.மணி இல்ல மண விழா மகிழ்வாக, கழக தொழிலாளர் அணி சார்பில், தாராபுரம் அண்ணா சிலை அருகில் கடந்த 28.5.2023 ஞாயிறு மாலை 7 மணியளவில் “பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமி ழன் குற்றவாளியே!” எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.
நிகழ்வில், திராவிடர் கழகத்தின் தாராபுரம் ஒன்றிய செயலாளர் நாத்திக சிதம்பரம் தலைமை தாங் கினார்.திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மல்லிகா செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் நடுவராக பங்கேற்று வழக்காடு மன்றத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்வில், “ பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளியே ‘’ என்று வழக்கு தொடுத்த கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் குறிப்பிட்ட தாவது :
தை முதல் நாள் தான் தமிழ புத்தாண்டு! ஆனால் ஆரியர்களுக் கான சமஸ்கிருத ஆண்டை தமி ழன் கொண்டாடுகிறான். மதமற்ற திராவிட இனத்தை சேர்ந்த தமி ழன், சித்திரை மாதம் முதல் பங் குனி மாதம் வரை மத பண்டிகை களுக்கு பொருட் செலவு செய்து முக்கியத்துவம் தருகிறான்.மணப் பெண்ணை இழிவுபடுத்தும் சமஸ் கிருத மந்திரத்தை கூறும் பார்ப் பனர்களை அழைத்து தமிழன் திருமணம் புரிகிறான். தமிழில் பெயர் வைத்து மாபெரும் புரட் சியை உருவாக்கிய திராவிட இயக் கங்கள் உள்ள நாட்டில் இனத்தால் திராவிடனான தமிழன் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் பெயர்களை சூட்டுகிறான். ஆகவே பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளியே! என்றார்.
பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளி அல்ல ! என்று வழக்கை மறுத்து, கழக சொற்பொழிவாளர்
வழக்குரைஞர் பா.மணியம்மை பேசியதாவது ;
வேதம்,கடவுள்,மதம், ஜாதி உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை விதைத்த பார்ப்பனர்களே குற்ற வாளி! பலியாகிய தமிழன் அப் பாவி! தமிழனை சிந்திக்க வைத் தால் சரியான பாதையில் செல் வான். பண்பாட்டு படையெடுப் புக்கு மூல காரணமான பார்ப்பன சனாதனத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளே குற்றவாளி! தமி ழன் குற்றவாளியல்ல! என்றார்.
நடுவர் உரை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் இரா.பெரியார் செல்வன் தீர்ப்பு அடங்கிய தமது உரையில் தெரிவித்ததாவது ;-
நாடாளுமன்றமா? நாடாளு மன்ற மடமா ? என்று எண்ணுகின்ற அளவுக்கு மதச் சடங்குகளை முன்னிறுத்தி சனாதனவாதியான சவார்க்கர் பிறந்த நாளான 28.5.2023 அன்று நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்பட்டுள் ளது.
நாடாளுமன்றத்தை இந்துத்வா கோட்டையாக மாற்றவேண்டும் என்பதுதான் பிரதம அமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. ஜனநாயக ஆட்சியை அகற்றி மீண்டும் மன்ன ராட்சியை ஏற்படுத்த பல்வேறு வடிவங்களில் சங்பரிவார் அமைப் புகள் வன்முறை வெறியாட்டங் களை நடத்திக் கொண்டும், நாட்டை கூறுபோட திட்டம் வகுத்துக் கொண்டும் இருக்கின்ற சூழ்நிலையில் நாடு இருக்கிறது. இந்த நாடு காப்பாற்றப் பட வேண்டும்.
பண்பாட்டுப் படையெடுப்பு களான மதம்,ஜாதி உள்ளிட்ட மூடநம்பிக்கைகளால் ஏற்படும் வன்முறை வெறியாட்டங்களை தடுப்பதற்கு தான் மக்கள் மன்றத் தில் திராவிடர் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக் கிருந்த போது மலத்தை அள்ளி வீசினார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் மலத்தை அள்ளி வீசியவர்கள்மீது கோபப்படவில்லை! மலம் என்று தெரிந்தும் என் தமிழன் அதில் கை வைக்கிறானே என்று சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் தமிழனை எதிரியாக பார்த்தது இல்லை! மதவெறிக்கு எதிராக அரசியலை கடந்து தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு, மக்கள் நேசிக்கும் மாநிலம் தமிழ்நாடு! மொழிப் போராட்டத்தில் உயிரையே கொடுத்தவன் தமிழன்!
தமிழன் மதம்,ஜாதி போன்ற பண்பாட்டு படையெடுப்புகளுக்கு பலியானாலும், இனம், மொழி, உரிமை என்று வரும்போது ஒன்று படுகிறான். சுயமரியாதை, அமை திப் பூங்கா இவ்விரண்டும் தமிழ் நாட்டின் தனித்தன்மைகள்!
சமஸ்கிருத பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றும் திராவிட இயக்கத்தின் சிந்தனை பண்பாட்டு படையெடுப்பை முறியடித்தது. இந்திய அரசியலை தமிழ்நாடு தான் இயக்குகிறது. சர்வாதிகாரி ஹிட்வருக்கு எப்படி ரஷ்ய அதிபர் ஸ்டாலின் முடிவுரை எழுதி னாரோ, அதைப் போன்று வருகின்ற 2024 இல் மோடிக்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முடிவுரை எழுதுவார்.தமிழர்களே ஒன்றுபடுக!
தீர்ப்பு
பண்பாட்டு படையெடுப்பு களுக்கு பலியாகும் தமிழன் குற்ற வாளி அல்ல! தமிழன் சீர்திருத்தப் பட வேண்டியவன்!
தமிழனின் பண்பாடுகளை சிதைக்கும் வகையில் ஆரிய பண் பாட்டுப் படையெடுப்பை நிகழ்த் திய பார்ப்பனர்களே குற்றவாளி! மதவெறியாட்டங்களை நிகழ்த்தும் ஆர்.எஸ்.எஸ் உள் ளிட்ட சங்பரிவார் அமைப்பு கள் தடை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் க.கிருட்டிணன்,செயலாளர் “உடுமலை” வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன், திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட தலைவர் அ .அழகப்பன், பொருளாளர் ப.மணி, தாராபுரம் கழக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.ராதா பெரியார் நேசன், தாராபுரம் கழக மாவட்ட அமைப்பாளர் கே.என்.புள்ளி யான், தாராபுரம் நகர துணை செயலாளர் மு.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“பெரியார் பிஞ்சு “ சி.ரா.யாழ் மதிவதனி துவக்க உரையாற்றினார். திராவிடர் கழக தோழர்கள் வழக்குரைஞர் முருகேசன், வழக் குரைஞர் தி.செல்வராஜ், உமா புள்ளியான், மா.பழனிச்சாமி, ராசு, சேகர், வே.மாரியப்பன், செ.முத்துக் கிருஷ்ணன்,ம.தங்கவேல்,ச.மணி கண்டன் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மதி பெரியார் நேசன், மு.மாரிமுத்து, பு.முரு கேசன், சு.திராவிடன், கா.வெள்ளி, எம்.ஏ.ஜெய்லானி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் க.வி.சிவசங்கர் (திமுக) உள்ளிட்ட பெருவாரியான தோழர்கள் பங்கேற்றனர்.
இந்த வழக்காடு மன்றம் வெகு மக்களிடையே பகுத்தறிவுச் சிந்த னையை தோற்றுவித்தது என்று சொன்னால் அது மிகையாகாது! நிகழ்வின் நிறைவாக கழக பொதுக் குழு உறுப்பினர் “தையற் கலைஞர்” க.சண்முகம் நன்றி கூறினார்.