காது தொற்று காரணமாக, அறுவை சிகிச்சைக்குப் பின், முதன் முதலாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’ப் பணிகளை நேரில் சென்று தமிழர் தலைவர் பார்வையிட்டார். ‘பெரியார் உலக’ப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனத் தமிழர் தலைவர் பொறியாளர்களிடம் அறிவுறுத்தினார். அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், தொழிலாளர்கள் ‘பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ எனத் தெரிவித்தனர். உடன்: மோகனா வீரமணி, பொறியாளர் அருள், பொறியாளர்கள்: செந்தமிழ்குமார், ரமேஷ் பாபு, ஜெயப்பிரகாஷ் நாராயணன், காசிவிசுவநாதன், சிவபாலன், நிஷல், நித்திலா, எஸ். பிரபாகரன், அ. பாஸ்கர், ஹரிகரன் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், லால்குடி ஆல்பர்ட் (22.8.2025)