பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன? மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!

4 Min Read

சென்னை, ஆக.23– பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி  மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விகளை எழுப்பினார்.

”பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) தொடங்கப்பட்டதிலிருந்து, மாநில வாரியாக, குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்திற்கு… அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?

முக்கிய தொழில்துறை மாநிலமான தமிழ்நாட்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) செயல்திறனை ஒன்றிய அரசு மதிப்பீடு செய்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) எண்ணிக்கை மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் என்ன?

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் MSMEகளை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? எடுக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரங்கள் என்ன?

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லையெனில் அதற்கான காரணங்கள் யாவை?” என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கேள்விகள் கேட்டிருந்தார்.

ஒன்றிய அமைச்சர் பதில்

இந்த கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் சுஷ்ரி ஷோபா கரண்ட்லஜே எழுத்துப்பூர்வமாக பதிலளித் தார். அதில்,

“பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஒன்றிய அரசின் திட்டமாக இருப்பதால், மாநில வாரியாக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.

தேவை மற்றும் நிதி நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட கடன்களின் அடிப் படையில் இந்தத் திட்டத்துக்கான நிதி பயன்படுத்தப்படுகிறது.

PMEGP திட்டம் தொடங்கப்பட்ட 2008–2009 நிதியாண்டு முதல் தற்போதைய நிதியாண்டில் (2025-2026) 18.08.2025 தேதிவரைமாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 28 ஆயிரத்து 95 கோடியே 76 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 1754.14 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

இதே கால கட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 3791 கோடி ரூபாய், குஜராத்துக்கு 2378 கோடி ரூபாய், ஜம்மு காஷ்மீருக்கு 2075 கோடி ரூபாய் என வழங்கப்பட்டுள்ளன.

PMEGP திட்டத்தின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டு ஆய்வு எதுவும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை.

2008-2009 நிதியாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நடப்பு 2025-2026 நிதியாண்டில் 18.08.2025 வரை தமிழ்நாட்டில் 68,639 நுண்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உத்தேசமாக 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உட்பட நாட்டில் MSME-களை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவற்றில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மட்டுமல்லா மல் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை, தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் – கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம், MSME செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டம், MSME சாம்பியன்ஸ் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பார்க்கலாம்.

  1. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம்:

புதிய நுண் நிறுவனங்களை அமைப் பதில் தொழில்முனைவோருக்கு உதவுவ தற்கான ஒன்றிய அரசுத் திட்டம் இதுவாகும்.

PMEGPஇன் கீழ், பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு கிராமப்புறங்களில் திட்டச் செலவில் 25% மற்றும் நகர்ப்புறங்களில் 15% மானியம் வழங்கப்படுகிறது.

பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், மேனாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வடகிழக்கு பிராந்தியம், மலை, எல்லைப் பகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கிராமப்புறங்களில்35% மற்றும் நகர்ப்புறங்களில் 25% என்ற அளவில் மானியம் வழங்கப்படுகிறது.

  1. குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்:

இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), தனது உறுப்புக் கடன் நிறுவனங்கள் (MLIs) மூலம் நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு (MSEs) பிணை பாதுகாப்பு மற்றும் மூன்றாம் தரப்பு உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்படும் கடன்களுக்கு… கடன் உத்தரவாதத்தைவழங்குவதற்காக, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதி (CGTMSE) நிறுவப்பட்டிருக்கிறது.

  1. தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் (ESDP) திட்டம்:

பட்டியல் சமுதாயத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மேனாள் ராணுவ வீரர்கள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இளைஞர்களை சுயதொழில் அல்லது கூட்டுத்தொழில் செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிய நிறுவனங்களை ஊக்குவித்தல், ஏற்ெகனவே உள்ள MSMEகளின் திறனை மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது இதன் இறுதி நோக்கமாகும்.

  1. MSME செயல் திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் (RAMP) திட்டம்:

உலக வங்கியின் ஆதரவோடு செயல் படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டம் இது.

இத்திட்டத்தின் வழியாக புதுமை, டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணு கல், கடன் போன்ற அம்சங்களில் MSME செயல்திறனை ஊக்குவித்து மேம்படுத்தப் படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், MSME துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்க ளுக்கும் தலா ரூ. 5 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  1. MSME சாம்பியன்ஸ் திட்டம்:

MSME சாம்பியன்ஸ் திட்டம் என்பது நிலையான (ZED) சான்றிதழ் திட்டம், MSME போட்டி திட்டம் மற்றும் MSME புதுமையான வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.

இவ்வாறு நாட்டில் MSME-களை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்று அந்த பதிலில் ஒன்றிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *