சென்னை, ஆக. 23- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.8.2025) வழங்கினார்.
பணியாளர் தேர்வு
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டு மே முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத் திறனாளி செவிலியர்கள், 2,772 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,375 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்துக்கு 182 உதவி மருத்துவ அலுவலர்கள் (பொது), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கு 324 அறுவை அரங்கு உதவியாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்கு ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-1 என 555 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத் துக்கு 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்ககத்துக்கு 17 மருந்து ஆய்வாளர்கள், குடும்பநல இயக்ககத்துக்கு 54 வட்டார சுகாதாரப் புள்ளியி லாளர்கள் என 89 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் 644 பேருக்கு சென்னை, மாநிலக் கல்லூரியில் நேற்று (22.8.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, சுகாதாரத்துறை செயலர் ப.செந் தில்குமார், மருந்து கட்டுப்பாடு இயக்குநர் ஆர்.லால்வேனா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்டடங்கள் திறப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம், 66 புதிய பள்ளிக் கட்டடங்கள், 4 புதிய நூலகக் கட்டடங்கள், 49 பொது விநியோகக் கடைகள், 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள், 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் உள்பட மொத்தம் ரூ.104.24 கோடி மதிப்பிலான கட்டடங்களை நேற்று காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சாலை ஆய்வாளர்கள் பணியிடங்கள்
இது தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 124.97 கோடி மதிப்பில் 12 கோயில்களில் 17 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ரூ.32.53 கோடி மதிப்பில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 9 கோயில்களை அதன் பழைமை மாறாமல் புனர மைக்கும் வகையிலான திருப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை சார்பில் ரூ.60.85 கோடியில் நவீன கிடங்குகளையும் முதல மைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும் 55 பேருக்கு கருணை அடிப் படையில் பணிநியமன ஆணை களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அய்.பெரியசாமி, எ.வ.வேலு, அர.சக்கரபாணி, ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.