ஆண்டுக்கு மாவட்ட அளவிலான ஒரு மாநாடு-மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்!
பட்டுக்கோட்டை, ஜூன் 5 ஆண்டுக்கு ஒரு மாவட்ட அள விலான மாநாடு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்துவது உள்பட பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 30.5.2023 அன்று மாலை 6 மணி அளவில் மதுக்கூர் சண்முகா மினி அரங்கத்தில் திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க..அன்பழகன் தலைமையிலும் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அத்தி பெ.வீரையன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல் முன்னிலையிலும் நடைபெற்றது.
கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் எண்: 1
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மறைந்த பட்டுக்கோட்டை சா.சின்னகண்ணுவின் துணைவியார் பத்மாவதி அம்மையாரின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல் மற்றும் வீரவணக்கத்தை தெரி வித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண்: 2
ஈரோட்டில் 13.5.2023 அன்று நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் செயல் திட்டங்களை மகிழ்வோடு வரவேற்று அவற்றை விரைந்து செயல்படுத்தி முடித்திட உடன் நடவடிக்கை மேற்கொள்வது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம் எண்: 3
கழகத்தின் அமைப்பு முறைக்கான தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல்படி ஊராட்சி கிளைக் கழகம் ஒன்றிய கழகம் நகர கழகம் மாவட்ட கழகம் ஆகிவற்றின் அமைப்பு முறையை சீராக்கி உரிய பதிவேடுகளை செம்மையாக கையாள்வது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம் எண்: 4
பெரியாரியல் ஒரு நாள் பயிற்சி வகுப்பை ஜூலை மாதம் 29ஆம் தேதி பட்டுக்கோட்டையில் 50 தோழர்களுக்கு குறை யாது புதிய இருபால் இளைஞர்களை கொண்டு சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம் எண்: 5
இதுவரை அமைப்பு இல்லாத ஊராட்சியில் உடன் அமைப்புகளை தொடங்கி மாவட்டம் முழுமைக்கும் 15 புதிய கிளைக் கழகங்களை கழகக் கொடி ஏற்றி தொடங்கு வதற்கு வாய்ப்பாக மேற்படி ஊராட்சிகளில் கிராம பிரச்சாரத் தினை ஒன்றிய கழகத்தின் சார்பில் நடத்துவது என்று தீர்மானிக்கின்றது.
தீர்மானம் எண்: 6
கழக அமைப்பு உள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஆண்டிற்கு குறைந்தது ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடத்திட வேண்டுமாறு இக்கூட்டம், கிளைக் கழகப் பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 7
ஆண்டுக்கு ஒரு மாவட்ட அளவிலான மாநாடு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம் எண்: 8
மதுக்கூர் ஒன்றியம் படப்பை காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊரின் அமைதி மற்றும் அரசின் மதச்சார்பின்மையை குலைக்கும் வகையிலும் ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது மேலும் அரசு அலுவல கங்களில் எந்தவித மத அடையாளங்களையோ வழிபாட்டு சின்னங்களையோ அனுமதிக்க கூடாது என்ற அரசாணைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் அரசு பள்ளியில் கட்டப்படும் கோவிலை கட்டக்கூடாது எனவும் அப்பணியை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண்: 9
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மானமிகு சுய மரியாதைக்காரர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வை கிளைக் கழகங்கள் தோறும் பொதுக்கூட்டம் தெருமுனை கூட்டம் நடத்திக் கொண்டாடுவது என்று இக்கூட்டம் முடிவு செய்கின்றது.
தீர்மானம் எண்: 10
பட்டுக்கோட்டை கழக மாவட்ட துணைத் தலைவர் சொக் கனாவூர் கு. சிவாஜி புதிய பொறுப்பாளராக அறிவிக்கப் பட்டார் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத் தொடக்கத்தில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் கடவுள் மறுப்பு கூறினார். தொடர்ந்து மாநில கிராமப்புற பிரச்சார அமைப் பாளரும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைமைக் கழக பொறுப்பாளருமான முனைவர் அதிரடி க..அன்பழகன் தனது உரையில் பட்டுக்கோட்டை திராவிடர் கழகம் எப்படி தமிழ்நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்து செயல்பட்டதோ அதுபோல மதுக்கூர் ஒன்றியக் கழக இளைஞர்கள் மட்டும் 200 பேர் இருந்து செயல்பட்ட ஒரு பகுதியாகும். பேராவூரணி சேது பாவாசத்திரம் பகுதி மண்டல் ஆணைய பிரச்சினைக்காக 33 தொடர் கூட்டங்களை முன்னெடுத்த பகுதியாகும் எனவே இப்படி செயல்பட்ட ஒரு முன்னோடி மாவட்டமான பட்டுக்கோட்டை கழக மாவட்டம் தமிழ்நாட்டுக்கு முன் மாதிரி மாவட்டமாக திகழ கழகப் பொறுப்பாளர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மீண்டும் பழைய நிலையை அடையும். இப்பகுதி யில் தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாக உள்ளவர்களும் கழக மாநாட்டு ஊர்வலங்களில் முழக்கமிட்டு வந்து சிறப்பு செய்த வர்கள் என்பது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது என்று பழைய இயக்க வரலாற்று நிகழ்வுகளை அசைபோட்டு இயக்கத் தோழர்களை எழுச்சியூட்டி உரையாற்றினார்.
பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் வீரையன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு பழனிவேல் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் சோம நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.இரத்தினசபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி, இரா.காமராஜ் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் என்.கே.ஆர்.நாராயணன், மாவட்ட திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் பட்டுக்கோட்டை அ.அண்ணாதுரை, மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி அமைப்பாளர் முத்து துரைராஜ், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கழகப் பாடகர் பாவலர் பொன்னரசு, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சு. நடராஜன், பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சிற்பி வை. சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் சி. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் பள்ளத்தூர் ஆ.சண்முகவேல், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப் பாளர் நா.வை.இராதாகிருட்டிணன், மண்டல கோட்டை சரவணன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர் ரெ.திருமேனி, பேராவூரணி நகர திராவிடர் கழக செயலாளர் சி. சந்திரமோகன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.வசி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பொ.சந்தோஷ்குமார், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவர் செங்கமங்கலம், செ.கவுதமன், மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் வீ. வீரமணி, அத்திவெட்டி கழகப் பொறுப்பாளர் க. இராஜாராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தொ.சமரன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கருப்பூர் முருகேசன், கருப்பூர் குமார், ஜெயபால், மகளிரணி தோழர்கள் ஜோதி, சிராங்குடி, தமிழரசி, செந்தமிழ், அரசி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகள் வழங்கினர்.
மேலும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் புலவஞ்சி அண்ணாதுரை நன்றி கூறினார்.