சென்னை, ஜூன் 5 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பர்சார் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு கல்விச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள பர்சார் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண் ணப்பதாரர்களின் பதிவு எண்ணிக்கை 1:4 என்ற விகிதத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு 10.03.2023 FN & AN அன்று TNPSC மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மய்யங்களில் நடைபெற்றது. இணைய வழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்ப தாரர்கள் ஏற்கெனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய் யப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, வாய்மொழித் தேர்வுக்குத் தகுதி யானவர்களின் பட்டியல் 1:3 என்ற விகிதத்தில் வெளியிடப்படும்