சென்னை, ஆக. 22– தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மய்யங்கள் அமைக்க வேளாண் பட்ட தாரிகளுக்கு ரூ.20 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (22.8.2025) வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உழவர் நல
சேவை மய்யம்
சேவை மய்யம்
வேளாண் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பை முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில் நுட்பத்திறனும் உழவர் பெருமக்களுக்கு உதவி யாக இருந்து வேளாண் உற்பத்தியினை உயர்த் திடும் வகையில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற் காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிடப்பட்டது.
இத்திட்டத்தில், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் உழவர்நல சேவை மய்யங்கள் அமைக்கப்படும். இதற்கு 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானிய மாக வழங்கப்படும். இந்த மய்யங்களில் உழவர்களுக்கு தேவை யான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவை யான ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட் களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
உழவர் நல சேவை மய்யங்கள்
முதலமைச்சரின் உழவர் நல சேவை மய் யங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற உதவும். மேலும், வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்கள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பும் ஏற்படும். இந்த திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர் நல சேவை மய்யங்களை சிறப்பாக நடத்தும் வகையில் வேளாண்மை – உழவர் நல துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மய்ய பயனாளி களுக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகளின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சியும் அளிக்கப்படும்.
எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் வங்கி களில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடை முறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப் பட்டபின், இத்திட்டத்தில் மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
சுயதொழில்
அரசின் உதவியுடன் துவங்கப்படும் இந்த திட்டம், சுயதொழில் என்பதால் இந்த வாய்ப்பினை வேளாண் பட்டதாரிகள், பட்டய தாரிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.