பீளமேடு, ஆக. 22– கடந்த 18.8.2025 அன்று மாலை 6 மணிக்கு கோவை ரொட்டிக்கடைமைதானம் பீளமேடு பகுதியில் பகுதி கழகச் செயலாளர் மா.ரமேஷ் தலைமையிலும் மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாநகரத் தலைவர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, ஆடிட்டர் ஆனந்தராஜ், பழ.அன்பரசு, பீளமேடு பகுதி கழகத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் வரவேற் புரையாற்றினார்.
திமுக பகுதி கழக பொறுப்பாளர்கள் ஏ.எஸ்.நடராஜ், துரை செந்தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகர இளைஞரணி அமைப் பாளர் திமுக தனபால், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், டெம்போ குருசாமி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். கழக பேச்சாளர் பொன் அருண் குமார் சிறப்புரை ஆற்றினார்.
தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ்,தெற்கு பகுதி தலைவர் கும ரேசன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் ராஜா, ஆட்டோ சக்தி, சிவக்குமார்,லூகாஸ், குமார்,குறிச்சி குரு, ஆவின் சுப்பையா, முத்து கணேஷ், ஆறுமுகம்,திலகமணி, தேவிகா, சந்திரகலா, பாட்ஷா மற்றும் ஏராள மான பொது மக்கள் பங்கேற்றனர். இறுதியாக கணபதி பகுதி தலைவர் திராவிட மணி நன்றியுரை வழங்கினார்.