இந்தோனேசியா பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் 2025, ஆகஸ்ட் 14 முதல் 16 வரை இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன், தகுதி சுற்றில் முதலிடம் பெற்று, மேல் சுற்றில் 8ஆம் இடம் (Top Round 8) வரை முன்னேறினார்.
300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில், தமிழ்நாட்டின் இரா.எத்திராஜன், கிலிசிக் (சிங்கப்பூர்) 3-2, ஒகா (ஜகர்தா) 3-2, அவன் (இந்தோனேஷியா) 3-0, கேமின் (பாலி)3-0 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்றார்.
பன்னாட்டு டேபிள் டென்னிஸ் (சிங்கப்பூர்) ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், எத்திராஜனுக்கு, பதக்கத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இரா. எத்திராஜன் பன்னாட்டு டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில் (ITTF) சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்.