பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து மற்றும் இறகு பந்துப் போட்டிகள் அரியலூரில் உள்ள எஸ்டிஏ.டி. விளையாட்டு மைதானத்தில் 20.08.2025 அன்று நடைபெற்றது. அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மூன்றாம் இடமும் மற்றும் இறகு பந்து போட்டியில் மாணவிகள் 19 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவுகளில் கலந்துகொண்டு மூன்றாம் இடமும் பிடித்தனர். போட்டியில் வென்ற வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர். ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினார்.
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் வெற்றி

Leave a Comment