கோவை,ஜூன்.5- கோவை கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு சுந்தராபுரம் பெரியார் சிலை முன்பாக மாலை 5 மணி அளவில் டாக்டர் கலைஞர் படத்திற்கு மாநகர தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட செய லாளர் க.வீரமணி, மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ் செல்வம், மாநகர செய லாளர் சா.திராவிடமணி, மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட மக ளிரணி தலைவர் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.