லண்டன், ஆக. 22- பிரிட்டனில் வேக மாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான உணவுச் சந்தையில், அதிகப்படியான சீனி (சர்க்கரை) மற்றும் உப்பு சேர்க் கப்படுவது குறித்து தீவிரமான கவ லைகள் எழுந்துள்ளன. இதையடுத்து, குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
18 மாத அவகாசம்
இந்த புதிய விதிமுறைகளின்படி, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சீனி மற்றும் உப்பின் அளவைக் குறைக்குமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைச் செயல்படுத்த நிறுவனங்களுக்கு 18 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகளை அறிமுகம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
பி.பி.சி. பனோரமா நடத்திய ஒரு விசாரணையில், குழந்தைகளுக்கான சில உணவுப் பொருட்களில் அதிகப்படியான சீனி சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, ‘பவுச்’ எனப்படும் பொட்டல வடிவில் உடனடியாகச் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் சத்தானதாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. இத்தகைய உணவுகளைத் தங்கள் குழந்தைகளின் அன்றாட உணவுக்காக நம்பியிருக்க வேண்டாம் என்று பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ‘packed with goodness’ (நன்மைகள் நிறைந்தது) போன்ற விளம்பர வாசகங்களைக் கொண்ட உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பிரிட்டனில் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர் காலத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.