மீனம்பாக்கம், ஆக 22- விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு தொடர்ந்து முக்கியமான மசோதாக்களை இறுதி நாள் வரை காத்திருந்து கொண்டு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எதிர்கட்சிகளுக்கு மசோதாவை படிக்ககூட நேரமோ, அவகாசமோ தருவதில்லை. மசோதாக்கள் மீது கருத்து சொல்வோ, எதிர்க்கவோ, மசோதாவில் திருத்தம் செய்யவோ அவகாசம் தராமல் ஒவ்வொரு முறையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்தை, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சிகளை அச்சுறுத்தவே நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற துடிதுடித்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் நாங்கள் தேர்ந்து எடுத்த ஆட்சியா? அல்லது ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உருவாக்கிய ஆட்சியா? என்ற மிகப்பெரிய கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ராகுல் காந்தி உள்பட எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தரவுகளுடன் தான் எடுத்து சொல்கின்றனர். இது தொடர்பாக விவாதம் நடத்த குரல் எழுப்பி நாடாளுமன்றத்தில் போராடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.