செல்லப்பிராணியா? கொல்லும் பிராணியா? செல்லப்பிராணி வளர்ப்போர் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மாநகராட்சி எச்சரிக்கை

2 Min Read

சென்னை, ஆக 22 சென்னையில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய விதிமுறைகள்:

உரிமம் கட்டாயம்: செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 தடுப்பூசி: வளர்ப்பு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Rabies Vaccine) முறையாகப் போடப்பட்டிருக்க வேண்டும். உரிமம் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பொது இடங்களுக்கு அனுமதிக்கப்படும்.

 கட்டுப்பாடு அவசியம்: பொது இடங்களான வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் செல்லப்பிராணிகளை கழுத்துப்பட்டை மற்றும் சங்கிலி இல்லாமல் திரியவிடக் கூடாது.

முகமூடி: பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது, மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதி, அதன் வாயை மூடியிருக்க வேண்டும் (Muzzle).

எண்ணிக்கை கட்டுப்பாடு: ஒரு நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

 பொறுப்புணர்வு: அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (lift) மற்றும் பொது இடங்களில் நாய்களின் நடவடிக்கை மற்றவர்களுக்கு அச்சம் அல்லது சவுகரியத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

ஆபத்தான நாய்களுக்குத் தடை: பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான மற்றும் வெறித்தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது.

கடுமையான நடவடிக்கை: இந்த விதிகளை மீறி, உரிமம் பெறாமல், வெறித்தன்மை கொண்ட நாய்களைப் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால், இந்திய பிராணிகள் நல வாரியத்தின் வழிகாட்டு தலின்படியும், உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின்படியும் உரிமை யாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மேனாள் வீரர்களின் குறைகளை கேட்டறிய ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி

குன்னூர், ஆக 22  மேனாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 மேனாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மய்யத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வரவேற்றார்.

அனைத்து மேனாள் ராணுவ வீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், ஒட்டுமொத்த ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவத்தினர் கலந்துரையாடினர். கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி செப்டம்பர் 3-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.

 

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *