சென்னை, ஜூன் 6 – தமிழ்நாடு சட்டப் பேரவையில், கடந்த ஏப்., 10ஆம் தேதி நடந்த சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, ‘சிறைவாசிகள் நலனுக்காக, உணவு முறை 26 கோடி ரூபாய் செலவினத்தில் மாற்றியமைக் கப்படும்’ என, சிறைத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.
அதன் அடிப்படையில், நேற்று (5.6.2023) தமிழ்நாடு மேனாள் முதல மைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு, புதிய உணவுமுறை மற்றும் உணவின் அளவை மாற்றியமைக்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழ்நாடு சட்டப் பேரவை யில் அறிவிக்கப்பட்டதை போலச் சிறை கைதிகளின் உணவு முறை மாற்றப் பட்டுள்ளது. புதிய மெனுவில் பொங்கல், முட்டை, சிக்கன் கிரேவி உள்ளன.
சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டி ருந்தார். அது அப்போதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அனைத்து சிறைகள்- மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறை, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி என அனைத்திலும் நூலக வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
மேலும் ஆத்தூர், திண்டுக்கல், விருது நகர், நாகர்கோவில், நாகை, ராமநாதபுரம், கோபி, செங்கல்பட்டு என 8 மாவட்ட சிறைகள் மற்றும் 105 கிளை சிறைகளில் சிசிடிவி கேமரா அமைக்கப் படும் என்றும் அறிவித்தார் மேலும், தடை செய்யப்பட்ட பொருட் கள் சிறைக்குள் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில், 13 மாவட்ட சிறைகளில் ரூ.2.73 கோடி செலவில் “x ray baggage scanner”வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இது மட்டுமின்றி, ஒவ்வொரு சிறை யிலும் கைதிகளுக்கு ஆடியோ கால் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இது 3 நாட்களுக்கு ஒறு முறை, மாதத்திற்கு 10 முறை என உயர்த்தப்படும் என அறிவித்தார். வீடியோ கால் வசதியும் கொண்டு வரப்படும் என்றார்.
உணவு முறை மாற்றம்
குறிப்பாகச் சிறை கைதிகளின் உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதாவது கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வல்லுநர் குழுவின் பரிந்துரையை அடிப் படையாக வைத்து உணவு முறை மாற்றியமைக்கப்படும் என அறிவித்தி ருந்தார். அதன்படி இப்போது உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. இந்த புதிய உணவு முறையைப் புழல் மத்திய சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
காலை, மாலை என இரு வேளையும் டீ மற்றும் உணவு குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏ மற்றும் பி என இரண்டு களாஸ் கைதிகளுக்கும் உணவு மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.
தினசரி செலவு
அதன்படி ஏ க்ளாஸில் உள்ளவர் களுக்கு வாரத்திற்கு 3 நாட்களும் ஏ க்ளா ஸில் உள்ளவர்களுக்கு இரண்டு நாட்களும் அசைவ உணவு வழங்கப் படுகிறது. காலை பொங்கல், அவிச்ச முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல், டீ இரவு சப்பாத்தி சென்னா ஆகியவை இந்த மெனுவில் இடம் பெற்றுள்ளன. சிறை கைதிகளுக்கு எப்போது எந்த உணவு வழங்கப்படுகிறது என்பதை விரிவாக விளக்கி அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.