சென்னை, ஆக.22- திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
சேலத்தில் 5 லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்கு பந்தல் போட்டு, அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து, மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பேசினாலும், அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும், உண்ண சைவ, அசைவ உண வும் கொடுத்து நிழற்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும், வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
வந்த தொண்டர்களுக்குத் தண்ணீர் கொடுக்காது,
இளைப்பாறக் கூடாரம் போடாது,
தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி,
சாமானிய தொண்டனைச் சித்ரவ தைப்படுத்தி,
மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய்.
தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள், திரையரங்கு இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால், இந்த ரசிகர்கள் கூட்டம் உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும்.
இவ்வாறு அந்தப் பதிவில் கூறப் பட்டுள்ளது