எதிர்க்கட்சிகளின் கூட்டம் – தலைவர்களே பங்கேற்க வேண்டும் : நிதீஷ்குமார் கருத்து

2 Min Read

அரசியல்

பாட்னா  ஜூன் 6 நாடாளுமன்ற தேர்தலை ஓரணியாக நின்று சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்- அமைச்சரும் அய்க்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம், தள்ளி வைக்கப் பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் ஒரு முதலமைச்சரும், மூத்த தலைவரும் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறியிருந்தார்.ஆனால், கட்சி தலைவர்தான் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஜூன் 12-ஆம் தேதி தங்களுக்கு வசதியாக இல்லை என்று காங்கிரசும், மற்றொரு கட்சியும் என்னிடம் தெரிவித்தன. எனவே, கூட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்தேன். மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து புதிய தேதியை தெரிவிக்குமாறு காங்கிரசிடம் கூறியுள்ளேன். அதன்பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும். ஆனால், ஒரு விடயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பி லும் அந்தந்த கட்சிகளின் தலைவர்தான் பங்கேற்க வேண்டும். எந்தக் கட்சி யாவது, வேறு ஒரு பிரதிநிதியை அனுப் புவதாக சொன்னால், அது ஏற்புடையது அல்ல. உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, தலைவரை தவிர்த்து வேறு ஒருவரை அனுப்பி வைக்கும் என்ற செய்தி உலவுகிறது. அதை எங்களால் ஏற்க முடியாது. 

ஒடிசா ரயில் விபத்து துயரமானது. விபத்துகளை பற்றி நான் பெரிதாக கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால், ரயில்வேயை அருங்காட்சியகத்தில் வைக்க இந்த அரசு விரும்புகிறது. வாஜ்பாய் ஆட்சியில் நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 1999-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்காக பதவி விலகல் கடிதம் கொடுத்தேன். அதை ஏற்க வாஜ்பாய் விரும்பாதபோதிலும், எனது பிடிவாதத்தால் ஏற்றுக்கொண்டார். பிறகு மீண்டும் வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோது, ரயில்வே அமைச்சர் ஆனேன். ரயில்வே அமைச்சராக, தற் போதைய பிரதமரின் மாநிலத்துக்கு கூட நான் நிறைய செய்துள்ளேன். ஆனால் அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *