சென்னை, ஆக.21 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 77 சதவீதம் செயல்பாட்டிற்கு வந்ததாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தேனாம்பேட்டையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பன்னாட்டு நிறுவ னங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
77 விழுக்காடு முதலீடுகள்
பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ் நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும், இதுவரை 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங் களுக்கு இணையாக தென் மாவட்டங் களும் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை ஒன்றிய அரசு வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடுகிறது 2024 முதலீட்டாளர் மாநாட்டில் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அவற்றில் 80 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அய்ரோப்பாவிலும் “TN Rising” மாநாடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.