இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-இல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-இல் ரூ.5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ரூ.10, ரூ.100, ரூ.1,000, ரூ.10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன.