திருப்பதி, ஆக.21 திருப்பதி தேவஸ்தானத்துக்குப் பெயர் குறிப்பிடாத பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் காணிக்கையாகச் செலுத்தவிருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருப்பது, கோவிலுக்கு முதலமைச்சரே செய்யும் மார்கெட்டிங் வேலை ஆகும்
ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு மங்களகிரியில் ‘வறுமை ஒழிப்பு’ திட்டம் குறித்து உரை யாற்றியபோது,ஒரு நபர் திருப்பதி ஏழுமலையானின் அருளால் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது அந்த நிறுவனத்தின் 60% பங்குகளை விற்று 6000-7000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்துள்ளார்” என்று கூறினார்.
இங்கு சில கேள்விகள் எழு கின்றன.
ஒரு நபர் தன் நம்பிக்கையின் பெயரில் ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங் குவது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதை அரசுத் தரப்பில் இருந்து பகிரங்கமாக அறிவிப்பது, மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களை மேலும் அங்கு இழுக்கும் தந்திரமாகும்,. 140 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கோயிலில் சேர்வதால் சமூகத்திற்கு என்ன நன்மை? இந்தத் தொகை கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், பலரின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்படும். மாறாக, இந்தத் தங்கம் கோயிலின் பாதுகாப்புப் பெட்டகத்தில் முடக்கி வைக்கப் படும். இத்தகைய செல்வக் குவிப்பு, மத நிறுவனங்கள் சமூகப் பொறுப்புகளைத் தவிர்த்து, வெறும் செல்வந்தர்களின் நிறுவனங்களாக மாறிவிடுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒருவர் தனது செல்வத்தை கடவுளுக்குக் கொடுப்பதாக நினைத்தாலும், அது இறுதியில் ஒரு நிறுவனத்தின் (கோயில்) கணக்கில் சேருகிறது. இந்த நிகழ்வு, பகுத்தறிவைப் புறந்தள்ளி, உணர்ச்சிபூர்வமான நம்பிக்கைகளை மட்டுமே மய்யமாகக் கொண்டு செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.
சந்திரபாபு நாயுடு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு பிரதமராக அமர்ந் துள்ள மோடியின் நாற் காலிக்கு முட்டுகொடுக்கும் கட்சி யின் தலைவர், இவர் பிரத மரை மறைமுகமாக மிரட்டி தமிழ்நாட்டிற்கு வரும் செமிகண்டக் டர் மற்றும் தமிழ்நாடு துறைமுக விரிவாக்கம் தொடர்பான ஒப்பந்தங் களை ஆந்திரமாநில அரசின் பக்கம் திருப்பும் வேலையைச் செய்வதாக காங்கிரஸ் தலைவர்களின் ஒருவர் ஜெயராம் ரமேஸ் கூறி இருந்தார்.
உண்மையில் சந்திரபாபு திருப்பதி கோவிலுக்குச் சென்று முறையிட்டால் ஆந்திராவில் இயங்கும் நிறுவனங்களை லாபத்தில் இயக்கவைக்கமாட்டாரா அந்த திருப்பதி பாலாஜி?
மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்த வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று பெயரெடுக்கும் மாநிலத்தின் முதலமைச்சரே இவ்வாறு பேசலாமா?