இந்நாள் – அந்நாள்

2 Min Read

ப.ஜீவானந்தம் பிறந்தநாள் இன்று (21.08.1905)

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி  ஜீவானந்தம் அவர்களின் பிறந்தநாள். தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகப் பாடுபட்ட அவர், தமிழ்நாடு அரசியலிலும் சமூக மாற்றத்திலும் நீங்கா இடம் பெற்றவர்.

ஜீவானந்தம், 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பூவங்குளம் கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திலும், சமூகப் போராட்டங்களிலும் ஈர்க்கப்பட்டார்.

1930களில் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். கட்சித் தலைவர்களுள் ஒருவரான அவர், தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்தார். ஒரு சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுகள் மக்களைச் சிந்திக்கத் தூண்டுயதோடு, போராட்டங்களுக்கு  மக்களைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தன. ‘ஜனசக்தி’, ‘தாமரை’ போன்ற பத்திரிகைகளை நிறுவி, அவற்றில் பொதுவுடைமைக் கருத்துகளையும் சமூகப் பிரச்சினைகளையும் பற்றித் தொடர்ந்து எழுதினார்.

1952ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை நகரத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், கல்வி மேம்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் இன்றும் பலரால் போற்றப்படுகின்றன.

தந்தை பெரியாருடன் ஜீவானந்தம்

சுயமரியாதை இயக்கம்: ஆரம்ப காலத்தில் ஜீவானந்தம், தந்தை பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூக சமத்துவம் போன்ற பெரியாரின் கொள்கைகளை ஜீவானந்தம் முழுமையாக ஆதரித்தார். பகத்சிங்சின் ‘நான் ஏன் நாத்திகன்?’ என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

பத்திரிகை பங்களிப்பு: பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ மற்றும் ‘புரட்சி’ போன்ற பத்திரிகைகளில் ஜீவானந்தம் பல கட்டுரைகளை எழுதினார். பெரியாரின் கருத்துகளைப் பரப்புவதிலும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியாரும் ஜீவானந்தமும் இணைந்து சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  தந்தை பெரியார் ஏற்பாடு செய்த பல மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் ஜீவானந்தம் ஒரு முக்கியப் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.

ப.ஜீவானந்தம் பொதுவுடைமைக் (கம்யூனிச) கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகள், ஜாதி ஒழிப்புடன் சேர்த்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று அவர் நம்பினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *