யாங்கூன், ஆக. 21- மியான்மர் நாட்டில் நேற்று (20.8.2025) மாலை 6.16 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், மிதமான அளவிலான நிலநடுக்கம் என்பதால், பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 28 அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது