திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்று சாதனை!

1 Min Read

அவிநாசி, ஆக.21- திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கடந்த 17.08.2025 அன்று இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, இந்திய யோகாசன சங்கம், தமிழ்நாடு யோகாசன சங்கம் மற்றும் தபஸ் யோகாலயா அமைப்பு  ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் யோகாசனத் திறமைகளை வெளிப்படுத்திய இந்தப் போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர், செல்வன்.வி.பவனேஷ் 13 வயதிற்கு உட்பட்டோருக்கானப் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தோடு, தங்கப் பதக்கமும், கோப்பையையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *