மாஸ்கோ, ஆக. 21- உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது தொடர்பான பன்னாட்டுப் பேச்சு வார்த்தையில் ரஷ்யாவும் இடம்பெற வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைனின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா இல்லாமல் பேசுவது பயனற்றது.
அய்ரோப்பிய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மோதலைத் தூண்டுவதற்கும், அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் மட்டுமே பயன்படும்.
ரஷ்யா இல்லாமல் அந்த நாடுகள் மேற் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன” என்றார்.