டெக்கான் கிரானிக்கல், சென்னை
* சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
* பிரதமர், முதல்வர் பதவி பறிக்கும் மசோதா மன்னர் தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார்: சுதர்சன் ரெட்டி அறிமுக நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ஆவேசம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* இளைஞர்களுக்கு வாய்ப்பு: தேர்தலில் போட்டியிடும் வயதை 25இல் இருந்து 21ஆக குறைப்போம், ரேவந்த் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஆளுநர் விருப்பப்படிதான் இயங்க வேண்டுமா? உச்சநீதிமன்றம் காட்டம்.
* ‘சுதர்சன் ரெட்டி சமத்துவத்தின் அச்சமற்ற வீரர்’: மல்லிகார்ஜுன கார்கே எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவில் புகழாரம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தி இந்து
* தனியார் நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு அனுமதிக்க புதிய சட்டத்தை கொண்டு வாருங்கள்: மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அறிக்கை.
* பீகார் வாக்காளர் சிறப்பு திருத்த (SIR) செயல்பாட்டில் ஆண்களை விட அதிகமான பெண்கள் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தகவல்.
தி டெலிகிராப்
* ஆகஸ்ட் 28 அன்று பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார பயணத்தில் அகிலேஷ் கலந்து கொள்கிறார்.
குடந்தை கருணா